கொள்கைகள்

அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் கொள்கைகள்
  • Dr.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் கனவின்படி இன்றைய இளைஞர்கள் இந்தியாவை வல்லரசாக நல்லாட்சி புரியும் அரசியல்வாதிகளாக மக்களுக்கு அடையாளம் காட்டும் விதம் அவர்களை அரசியலில் நேரடியாக ஈடுபடுத்த துணை நிற்போம்.

  • மாணவ மாணவிகளை அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் அத்தியாவசியத் தேவைகளான கல்வி, உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறுபட்ட உரிமைகள் சலுகைகள் அனைத்தையும் எந்த ஒரு தங்கு தடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே இக்கட்சியின் குறிக்கோள்.

  • மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் நலத்திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு அவை மக்களுக்கு சென்றடைய வழி வகுப்போம்.

  • விதவைப் பெண்களின் நல்வாழ்விற்கு, மறுவாழ்விற்கு என ஒரு தனி இயக்கம் நமது கட்சி சார்பாக அமைத்து அவர்களுக்கென சட்ட ரீதியாக எந்த நிலையிலும் குறல் கொடுப்போம்.

  • அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கென நம் கட்சியில் ஒரு தனியிடம் உண்டு. அதைப்போலவே அவர்களுக்கும் அரசியல், அரசுத்துறை, தனியார் துறை மற்றும் அனைத்துத் துறைகளிலும் பணியமர்த்த வேண்டும். அது மட்டுமின்றி நம் தேச முன்னேற்றத்திற்கு மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பு இருக்கும் வகையில் நம் கட்சி போராடும்.

  • திருநங்கைகளின் வாழ்வாதார உயர்வு, சமுதாயத்தில் அவர்களுக்கென ஒரு இடம், தொழில் ரீதியான அணுகுமுறைகள் மற்றும் பல்வேறுபட்ட உரிமைகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு வழிவகை செய்வோம்.

  • நம் நாட்டிலேயே பிறந்து அகதிகளைப்போல் மலையுச்சிகளிலும், காடுகளிலும் மின்சாரம், பால், போக்குவரத்து போன்ற எந்த வித அடிப்படை வசதியுமின்றி வாழும் மலைவாழ் மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருவோம்.

  • நமது கட்சியில் பெரும்பான்மையான இட ஒதுக்கீடு மேற்கண்ட இளைஞர்கள், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனியிடம் உண்டு என்பது திண்ணம்.

  • கணவனால் மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்ட பெண்களுக்கென ஒரு தனி இயக்கம் அமைத்து அவர்களுக்குக் கிடைக்க வேண்டி.ய அனைத்து நியாயமான உரிமைகளையும் பெற்றுத்தரும் வகையில் போராட நம் கட்சி எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.

அனைத்து மக்கள் புரட்சி கட்சி

அனைத்து மக்கள் புரட்சி கட்சியில் உறுப்பினராக ...இணையுங்கள்