அறிக்கைகள்

அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் அரசியல் பயணம்

BJP தலைவர் தமிழிசையுடன் சந்திப்பு

மதிப்புக்குரிய சகோதரி டாக்டர்.தமிழிசை சவுந்தராஜன் அவர்களுக்கு வணக்கம், பிரதமர் திரு.மோடி அவர்களின் தலைமையில் நடந்த ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக, தற்போது பீகார் கவர்னராக உள்ள திரு.ராம்நாத் கோவிந் அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாக பா.ஜ., தேசிய தலைவர் திரு.அமித்ஷா அவர்கள் அறிவித்ததை தொடர்ந்து எங்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் தலைவரும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். எங்கள் நிறுவனத்தலைவர் திரு.ஜெ.செந்தில் ராஜா அவர்கள் இச்செய்தி அறிந்து மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தார், அதன் காரணம் பா.ஜ.வுக்கு மதவாத கட்சி என்று அரசியல் சாயம் பூசும் எதிர்கட்சிகள் முகத்தில் கரியை பூசும் வண்ணம் கான்பூரை சார்ந்த 71வயது நிரம்பிய வழக்கறிஞரும், தற்போது பீகாரின் கவர்னருமான திரு.ராம்நாத் கோவிந் அவர்கள் ஒரு தலித் என்பதே ஆகும். உலகில் முதன் முதலாக ஒரு மாற்றுத்திரனாலி அரசியல் கட்சி ஆரம்பித்தார் என்ற பெருமையை கொண்ட எங்கள் நிறுவனத்தலைவர் திரு.ஜெ.செந்தில் ராஜா அவர்களும் ஒரு தலித் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். எங்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் சார்பாகவும், தலைவர் அவர்களின் சார்பாகவும் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., சார்பாக போட்டியிடும.

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சியில் கொடி அதன் கொள்கைகள்

அனைத்து மக்கள் புரட்சி கட்சியில் கொடி அதன் கொள்கைகள் மற்றும் கோட்பாட்டினை விளக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலனை குறிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. இது ஒரு நான்கு வர்ணக்கொடி. இந்தியாவில் நாலாவது வர்ணத்தை யாரும் ஏற்றுக் கொள்வது இல்லை. தேசியக் கொடியையே நாம் மூவர்ணகொடி என்று தான் குறிப்பிடுகிறோம். அதில் நான்காவது வரணமாக நீலம் இருப்பதை மறந்து விடுகிறோம். மறுப்பதும், மறந்ததும், கொடியின் வண்ணத்தில் மட்டுமில்லை. “நான்காம் வர்ண” மக்களையும் தான். சிவப்பு நிறம் புரட்சியை குறிக்கும். இந்துத்துவாவை குறிக்கும். சிவப்பு உலக வரலாற்றை புரட்டிப் போட்டு புதிய அத்தியாயைங்களை எழுதியது. புரட்சி,போராட்டம், உரிமை, தைரியம், என சிகப்பு நிறத்திற்குரிய தன்மைகளை தாங்கி நிற்கிறது. அடுத்ததாக பச்சை: பச்சை நிறம் விவசாயம் குறிப்பிடும். விவசாயம் அழிவதை இனிமேலும் போறுத்துக் கொள்ள முடியாது. பச்சை நிறம் பசுமையை, சைவம், இயற்கையை குறிக்கிறது. பச்சை நிறம் இஸ்லாமிய சகோதரர்களையும் குறிக்கிறது. கருப்பு, திராவிடத்தின் நிறம் கருப்பு, பகுத்தறிவாழிகளைக் குறிக்கும் நிறம் கருப்பு. உழைப்பாளிகளின் நிறம் கருப்பு. வெள்ளை, அமைதி, சமாதானம் தூய்மை, கிறிஸ்துவம் ஆகியவற்றை குறிக்கும். எல்லோரும் எல்லாமும் பெற வெண�

post2

முதலாம் செயற்கூட்டத்தின் முதல் தீர்மானம்

முதலாம் செயற்கூட்டத்தின் முதல் தீர்மானம்: அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் தலைவர் திரு.ஜெ.செந்தில்ராஜா அவர்கள், ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார் அதனை திரு.அருண் சுதாகர் வழிமொழிய கூட்டத்தினர் அனைவரும் வழி மொழிந்தனர். உருப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க தலைவராக உயர்திரு ஜெ. செந்தில்ராஜா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

post2

பொதுச்செயலாளர் திரு.M.B.அருண்சுதாகர்

தலைவர் உயர்திரு.ஜெ. செந்தில்ராஜா அவர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு திரு.M.B.அருண்சுதாகர் அவர்களை பரிந்துரைக்க திரு. M.C.K.உதயசெல்வன் வழிமொழிந்தார் அதனை தொடர்ந்து கூட்டத்தில் உள்ள அனைவரும் ஓர் மனதாக ஏற்றுக் கொண்டன

post5

அனைத்து மக்கள் புரட்சி கட்சி அறிமுகம்

அறிமுகம்: நாள் : 15-10-2015 இடம் : சென்னை சென்னையில் அனைத்து மக்கள் புரட்சி கட்சி அதிகாரப்பூர்வமாக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தும் விழாவில், உயர்திரு.ஜெ.செந்தில் ராஜா அவர்கள் தலைமைத் தாங்கினார். பொதுச்செயலாளர். உயர்திரு. M.B.அருண் சுதாகர் அவர்கள், மற்றும் பொறுளாளர் உயர்திரு.M.C.K.உதயசெல்வன் அவர்களும் முன்னிலை வகித்தனர்

post5
அனைத்து மக்கள் புரட்சி கட்சி

அனைத்து மக்கள் புரட்சி கட்சியில் உறுப்பினராக ...இணையுங்கள்